2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கொண்டு சென்ற மூவரை விசாரணை செய்ய அனுமதி

Niroshini   / 2016 செப்டெம்பர் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
 
சொகுசுக் காரில் கஞ்சா கொண்டு சென்றதாகக் கூறப்படும் மூவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்வற்கு, புத்தளம் மாவட்ட பதில் நீதவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் காதர், ஞாயிற்றுக்கிழமை(18) அனுமதி வழங்கியுள்ளார்.

சொகுசுக் காரொன்றில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக சனிக்கிழமை(17) புத்தளம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையிலான பொலிஸ் குழுவொன்று புத்தளம் - மன்னார் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய காரை சோதனைக்கு உட்படுத்தினர்.
 
இதன்போது குறித்த காரில் 500 கிராம் கஞ்சா, 40ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் இலத்திரனியல் தராசு என்பனவற்றைக் கைப்பற்றியதுடன், குறித்த காரில் பயணித்த மூவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.எம்.எஸ்.அப்துல் காதர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X