Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 02 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
வடமேல் மாகாணசபையின் தலைவர் டிக்கிரிபண்டா, ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாகப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியிலுள்ள 18 ஊடகவியலாளர் சங்கங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், குருநாகல் மாகாணசபைக்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை (01) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி, வடமேல் மாகாணசபைக்குள் வைத்து, ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாகப் பேசியமையைக் கண்டித்தே இவ் ஆர்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குருநாகல் நகரிலிருந்து பேரணியாகச் சென்று, வடமேல் மாகாணசபையின் தலைவர் கூறிய கூற்றை, ஜனாதிபதி முன்னிலையில் அவர் வாபஸ் பெற வேண்டும் எனக் கோரிய மனுவை, ஆளுநரிடம் கையளித்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாமல் கருணாரத்தினவும் இதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
19 minute ago
25 minute ago
51 minute ago