Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
கொழும்பிலுள்ள குப்பைகளை ரயிலில் எடுத்துவந்து புத்தளத்தில் கொட்டுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரிவித்தார்.
வடமேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு, நேற்று செவ்வாய்க்கிழமை (05) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது தனிநபர் பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் பேசிய மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்ததாவது,
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பிலுள்ள குப்பைகளை பிரத்தியேகமாக ரயில் மூலம் புத்தளத்துக்குக் கொண்டுவந்து கொட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், வன்னாத்தவில்லுப் பகுதியில் ஹொல்சிம் தனியார் நிறுவனம் குத்தைக்கு பெற்றுள்ள அறுவாக்காடுப் பகுதியில் இந்தக் குப்பைகள் கொட்டப்படவுள்ளன.
இதற்கென புத்தளம் பாலாவியிலிருந்து பிரத்தியேகமாக ரயில் பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிவரும் ரயில், நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நிறுத்தப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 வருடத் திட்டம் என்று குறிப்பிட்டாலும் அத்திட்டத்தில் எமக்கு சந்தேகம் உள்ளது. அதுமாத்திரமின்றி, குறித்த திட்டத்தினால் இயற்கை சமநிலையில் மாற்றம், தொற்று நோய்கள் மற்றும் குடிநீர் அசுத்தமானதாக நிறம் மாறுதல் என புத்தளம் மாவட்ட மக்கள் இதனால் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
இத்திட்டத்தை, புத்தளம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க மிகவும் உறுதியாகவுள்ளார்.
கொழும்பை அழகான நகரமாக்குவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், எமது புத்தளம் மாவட்டத்தைக் குப்பைகளாக்க வேண்டாம் என்பதே எமது மக்களின் கோரிக்கைகள்.
எனவே, குறித்த திட்டத்தை புத்தளத்தில் நடைமுறைப்படுத்த மாகாண சபை ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது என்பதை தயவுடன் கேட்டுக்கொள்வதுடன், இன, மொழி மற்றும் பிரதேசவாதம் என்பவற்றை தூக்கியெறிந்து விட்டு எமது மாவட்டத்தின் சமூகத்தின் எதிர்காலத்துக்காக எல்லோரும் ஒருமித்து குரல் கொடுப்பதன் மூலம் இதனை நிறுத்த முடியும் என்றார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் அனல் மின்நிலையம் அமைப்பதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட போது அதனை எல்லோரும் கடுமையாக எதிர்த்தார்கள்.
குறித்த பிரதேசத்தில் அனல் மின்சாரம் நிறுவப்படுமானால் அங்கு நிலக்கரிகளை ஏற்றி வருகின்ற கப்பலினால் கடலரிப்பு உண்டாகும் என அன்று கூறினோம்.
இந்தப் பிரதேசம் அனல் மின்சாரத்துக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தோம். எனினும், அன்று ஆயுத முனையில் மிகவும் வலுக்கட்டாயமாக அந்தத் திட்டத்தை முன்னெடுத்தார்கள். அதனால் மக்கள் இன்று பாதிப்புக்களை அனுபவிக்கிறார்கள்.
எனவே, அதுபோலவே குப்பைப் பிரச்சினையும் எதிர்காலத்தில் பாரிய சவாலாக வந்துவிடக் கூடாது என்பதற்காக எல்லோரும் ஒருமித்து குரல்கொடுக்க வேண்டும்.
குறித்த திட்டம் தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துகொள்ளும் வகையில் அதற்கான பெட்டி வன்னாததவில்லுப் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுதொடர்பில் பொதுமக்களுக்கு சொல்லப்படவில்லை. இவ்வாறானதொரு திட்டம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தப்படவில்லை.
இப்போதுதான் இதுதொடர்பில் பொதுமக்கள், சமயத் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஆகியோர் விழிப்படைந்துள்ளார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
28 minute ago