2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

10 வயது சிறுவன் மரணம்: தாய், தந்தை, பாட்டி கைது

Editorial   / 2022 பெப்ரவரி 10 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வயதான சிறுவன் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், அச்சிறுவனின் தாய், தந்தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அச்சிறுவனின் சடலம், நீர்​கொழும்பு, படல்கம ஆண்டிபொலவில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக, கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவ்வீட்டின் அறையொன்றுக்குள் இருந்து  சிறுவனின் சடலம் நேற்று முன்தினம் (09) மாலை மீட்கப்பட்டுள்ளது.

தொண்டையில் சளி சிக்கியமையால், அச்சிறுவன் கடந்த 7ஆம் திகதியன்று நோய்வாய்ப்பட்டுள்ளார்.

அந்த நோயை சுகப்படுத்துவதற்காக அவருடைய பெற்றோர், தாங்கள் நம்பும் சமயத்தின் அடிப்படையில் தியானம் செய்துள்ளனர்.

அந்த தியானத்தின் ​போதே சிறுவன் மரணமடைந்துள்ளார். எனினும், அவரை உயிர்பிப்பதற்காக, தொடர்ச்சியாக தியானம் செய்துள்ளனர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

அவரை சுகப்படுத்துவதற்கு வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையிலேயே தாய், தந்​தை மற்றும் பாட்டி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .