2025 ஜூலை 09, புதன்கிழமை

12 இலட்சம் ரூபா பணம் கொள்ளை சம்பவத்தில் உண்மையில்லை: பொலிஸ்

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்   

'அநுராதபுரம் புதிய நகரப் பகுதியில் அமைந்துள்ள மிருக உணவு விற்பனை நிலையத்தின் 12 இலட்சம் ரூபா பணத்தை இனந்தெரியாதோர் கொள்ளையிட்டுச் சென்ற சம்வத்தில் உண்மையில்லை' என விசாரணைகளை மேற்கொண்ட அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

கடந்த 31ஆம் திகதி குறித்த நிலையத்திலிருந்து 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்காக ஊழியர் ஒருவர் கொண்டு சென்றபோது மோட்டார் வண்டியில் வந்த இனந்தெரியாத இருவர் அதனை கொள்ளையிட்டுச் சென்றதோடு தனது கையையும் ப்ளேட் ஒன்றினால் கீறி காயப்படுத்தியதாகவும் குறித்த நிலையத்தின் ஊழியர் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்படு செய்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் இதில் எந்த உண்மையும் இல்லை எனவும் குறித்த ஊழியரினால் இச்சம்பவம் சோடிக்கப்பட்டுள்ளதும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

அராதபுரம் உதவி பொலிஸ் அதிகாரி கெலும் சீ திலகரத்னவின் ஆலோசனைப்படி அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பிரபாத் கால்லகேயின் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .