2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

2 இலட்சம் குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 ஜூலை 01 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் அற்ற 2 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு துரித கதியில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

இதன் முதற் கட்டமாக ஒரு இலட்சம் காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில்  இவை வழங்கப்படவுள்ளன.

இதேவேளை இப்பலோகம பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 10 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X