2025 ஜூலை 30, புதன்கிழமை

2 கஜமுத்துகளுடன் இருவர் கைது

Editorial   / 2024 ஜூலை 25 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த இரண்டு கஜமுத்துகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையமொன்றை நடத்தும் புத்தல, படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினாரால் உபாய தூதுவர் இருவர் மூலம் குறித்த கஜமுத்துகளை வாங்குவது போல் நடித்து அதனை புத்தளத்திற்குக் கொண்டு வர வழைத்து சந்தேக நபருடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .

 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .