Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 பெப்ரவரி 28 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று (28) கள விஜயம் மேற்கொண்டுள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.
அந்த வகையில் இன்று காலை (28) புலிபாய்ந்த கல் பகுதிக்கு சென்ற அமைச்சர் அங்கு நிலைமைகளை பார்வையிட்ட பின்னர் செம்மலை கிழக்கு நாயாறு பகுதியில் 2021 ஆம் ஆண்டு கடலில் மிதந்து வந்த இரும்பு மிதப்பியானது கரைவலைத் தொழிலுக்கு பாரிய இடையூறாக இருப்பதாக மீனவர்கள் தெரிவித்ததை அடுத்து, குறித்த பகுதிக்கு சென்றார்.
இதற்கமைய, அப்பகுதியை பார்வையிட்ட அமைச்சர் குறித்த இரும்பு மிதப்பியை இரண்டு மாதங்களுக்குள் அகற்றி தருவதாக மீனவர்களுக்கு உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago