2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட யானை உயிரிழந்தது

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

அநுராதபுரம், அலயாபத்துவ மானிங்கமுவ பகுதி விவசாயக்கிணறொன்றில் வீழ்ந்த யானை கிணற்றிலிருந்து மிக வும் கஷ;டத்துக்கு மத்தியில் மீட்கப்பட்ட பின் இன்று (28) மர ணித்துள்ளதாக பண்டுலகம வனஜீவராசிகள் திணைக்கள அதி காரிகள் தெரிவித்தனர்.

சுமார் 30 அடி ஆழமான கிணற்றில் வீழ்ந்த குறித்த யானை 15 வயதுடையதாகும். இந்த  யானையை மீட்டெடுக்க வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களுடன் இணைந்து 'பெகோ' இயந்திரங்களின் உதவியுடன் பல மணி நேர முயற்சியின் பின் மீட்கப்பட்டது.

எனினும் குறித்த யானை காட்டுக்குள் செல்லாமல் வயல் வெளியில் படுத்ததால் இதற்கு வைத்தியம் செய்துள்ளனர். எனினும் இந்த யானை சில மணி நேரங்களில் மரணமடைந்ததாக  பண்டுலகம வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0

  • PUTTALAM MANITHAN Tuesday, 29 November 2011 05:09 AM

    ஐயோடா மனித உயிரை விட யானை உயிர் பெரிதா? யானை பெரிதாக இருப்பதால் உயிரும் பெரிதாக இருக்கும் என்று நினைத்து விட்டான் மனிதன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X