2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

தினச் சந்தை கட்டிடத்துகான அடிக்கல் நாட்டும் விழா

Super User   / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளத்தில் புதிய தினச் சந்தை கட்டிடத்துகான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் பண்டார, வட மேல் மாகாண சபை உறுப்பினர் தாஹிர், புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் ஆகியோர் இணைந்து அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இதற்காக முதற்கட்டமாக 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு – வட்டவான வீதி செப்பனிடப்பட்டு தார் வீதியாக மாற்றும் நடவடிக்கை விரைவாக நடைப்பெற்று வருகின்றது.

புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரான கே.ஏ. பாயிஸின் வேண்டுகோளுக்கினங்க வட மேல் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் சனத் நிசாந்த வீதி புணரமைப்புக்காக இருபது இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.

பல வருடம் காலமாக குன்றும் குழியுமாக காணப்பட்ட இந்த செம்மண் வீதி புணரமைப்பு செய்யப்படுவதினால் கொத்தான்தீவு, கட்டைக்காடு, வட்டவான பகுதி மக்கள் பெரிதும் பயனடையவுள்ளனர்.

இவ்வீதி அபிவிருத்தி பணிகள் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X