Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 04 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆகில் அஹமட்)
அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள 46ஆவது சுதந்திரதின தேசிய நிகழ்வுகள் தொடர்பான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் அநுராதபுரம் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில்,
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் தலைவரும் அமைச்சருமான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, மாகாண அமைச்சர் எச்.பீ.சேமசிங்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள ஜயந்தி மாவத்தையின் விக்டரி வைத்தியசாலைச் சந்தியை தயார் செய்வது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்காக வருகை தரவுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கவைப்பதற்காக நகர மத்தியில் அமைந்துள்ள பாடசாலைகளான மத்திய மகாவித்தியாலயம், ஸ்வர்ணபாலி மகளிர் மகாவித்தியாலயம், வலிசிங்க ஹரிச்சந்திர மகாவித்தியாலயம், ஸாஹிரா மகாவித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலயம் ஆகியவற்றை ஒதுக்கி கொடுக்கவும் பொலிஸாரும் பாதுகாப்புப்படையினரும் தங்குவதற்காக நகரை அண்மித்துள்ள ஏனைய பாடசாலைகளை ஒதுக்கிக் கொடுப்பதற்கும் இக்கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
5 hours ago
5 hours ago