2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் நகர சபையினால் ஆதன வரி சேகரிப்பு வாரம் அனுஷ்டிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 05 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

புத்தளம் நகர  சபையினால் ஆதன வரி சேகரிப்பு வாரம்  பிரகடனப்படுத்தபட்டுள்ளதாக நகர சபையின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி  ஜே.ஏ.எம்.நிஜாம் தெரிவித்தார்.

இந்த வாரம் இன்று திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் புத்தளம் நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள  வீடுகள், கடைகள் என்பவற்றுக்கான ஆதன வரி செலுத்தப்பட்டுள்ளதா என்ற விபரம் திரட்டப்படுகின்றது. இதனடிப்படையில் உரிய காலத்திற்குரிய ஆதன வரி செலுத்தாது நிலுவையாக உள்ள இடங்கள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.

ஆதன வரி சேகரிப்பு நடவடிக்கைக்காக புத்தளம் நகர சபை ஊழியர்கள் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு வீடுகள் மற்றும் கடைகளுக்கும் சென்று  ஆதன வரி செலுத்தப்பட்டுள்ளதா என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர் என நிஜாம் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X