2025 ஜூலை 16, புதன்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 08 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கினால் முழுமையாகப் பாதிப்புக்குள்ளான வயற் காணிகளுக்காக 50353 பூஸல் விதை நெல்லினை இலவசமாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கினால் முழுமையாகப் பாதிப்புக்குள்ளான வயல் காணிகளுக்கு இலவசமாக விதை நெல்லினை விநியோகிக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த விதை நெல் விநியோகிக்கபடவுள்ளதாக மாகாண விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாயப் பணிப்பாளர் ஏ.எம்.தர்மதாஸ தொவித்தார்.

பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த விதை நெல் விநியோகிக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .