Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 10 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளம் தில்லையடி அல்காசிமி கிராமத்திலுள்ள ரிசாட் பதியுதீன் முஸ்லிம் மஹாவித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்திற்கு கைத்தொழில், வர்த்தக விவகார அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையில் புலமைப்பரிசில் மற்றும் சாதாரணதரப் பரீட்சை ஆகியவற்றில் சித்திபெற்ற மாணவர்கள் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுன், வகுப்பில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளும் இதன்போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
nafeel Sunday, 11 December 2011 03:20 AM
போடோஸ் இல்லையா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago