Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
வடமாகாண சமூகசேவை திணைக்களத்தினால் விதவைகள், முதியோர்கள், ஊனமுற்றவர்கள், பாரிய நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் தங்கி வாழ்பவர்களுக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுவருவதாக வடமாகாண ஆளுநரின் புத்தளம், மன்னார் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்தார்.
இன்று 13ஆம் திகதி தொடக்கம் இம்மாதம் 16ஆம் திகதி வரை இந்த கொடுப்பனவு புத்தளம் மற்றும் அநுராதபுரங்களில் வழங்கப்படுமென தெரிவித்துள்ள அவர், திகதி குறிப்பிட்ட தினங்களில் உரிய நலன்புரி முகாம்களில் மக்கள் இருக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.
13.12.2011 - பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, குசிக்கரம்பை - கண்டக்குளி, ஏ.ஜீ.ஏ.முகாம் - கற்பிட்டி, ஹிஜ்ரத்புரம் பாலாவி
14. 12. 2011 - காலை 9.00 மணி முதல் 4.15 வரை -.இடம் பெயர்ந்தோருக்கான செயலகம் – புத்தளம்
15.12.2011 - காலை 9.00 மணி முதல் 4.15 வரை -.இடம் பெயர்ந்தோருக்கான செயலகம் – புத்தளம்
16.12.2011 - காலை 11 மணி முதல் 2.30 வரை- ஹிஜ்ராபுரம் கனேவல்பொல அநுராதபுரம் ஆகிய பகுதிகளில் இந்த கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அநுராதபுரம் மாவட்டத்தில் நாச்சியா தீவு, மரதன்கடவல பயனாளிகளும் கணேவல்பொலயில் இந்த கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago