2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

முந்தல் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மரக்கறி வகைகளை எடுத்துச் செல்வதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விதிமுறைக்கு எதிராக முந்தல் பிரதேச விவசாயிகள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு முந்தல் பிரதேச செயலகத்தின் முன்னால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் இருநூற்றி ஐம்பதுக்கும் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டனர்.

இவர்கள் மரக்கறிவகைகளை எடுத்து வந்து வீதியில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், புதிய நடைமுறைக்கு எதிரான பல்வேறு சுலோகங்களையும் தாங்கி நிற்கின்றனர். இவர்கள் இந்த புதிய நடைமுறையினை நீக்குமாறு கோரும் மகஜர் ஒன்றினையும் பிரதேச செயலாளரிடம் கையளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X