2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மலசலக் கூட வசதிகளை பெற்றுத்தருமாறு கோரி புத்தளத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)
உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ள மலசல  கூட வசதிகளை தமக்கு பெற்றுத்தருமாறு கோரி புத்தளம், மக்கள் உட்கட்டமைப்பு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி திட்ட காரியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டனர்.

புத்தளம் நகரசபை உறுப்பினர் டீ.எம். முஜாஹிதுல்லாஹ் தலைமையில்  மலசல  கூடங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டுள்ளனர். 

உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப் பெற்ற 2000 மலசல  கூடங்களை வழங்குவதில் புத்தளம் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக  புத்தளம் நகரசபை உறுப்பினர் டீ.எம். முஜாஹிதுல்லாஹ் இதன்போது கருத்து தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் திட்ட பணிப்பாளர் எஸ்.எம்.யாஸீன்,  உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தினூடாக கிடைக்கப் பெற்ற 2000 மலசல  கூடங்களில் 798  மலசல கூடங்கள் புத்தளம் மக்களுக்கு வழங்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • azam Wednesday, 14 December 2011 07:57 PM

    சபாஸ் முஜஹிதுல்லா

    Reply : 0       0

    RIFAI Wednesday, 14 December 2011 09:35 PM

    நல்ல முயற்சி.

    Reply : 0       0

    abdullah Wednesday, 14 December 2011 11:10 PM

    பன்னிரண்டு பேர்தானா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X