2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் மோதி இரு பிள்ளைகளின் தந்தை மரணம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

இரு பிள்ளைகளின் தந்தையான எம்.எம்.எம்.அக்பர் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவர் ஆவார்.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சிகிச்சை பெறுவதற்காக சிலாபம் வைத்தியசாலைக்கு இவர் நடந்துசென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து சம்பவித்ததாக பொலிஸார் கூறினர்.

மிகவும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் இந்நபரை மோதிவிட்டு தப்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

பின்னர் மோட்டார் சைக்கிளுடன் சாரதி கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X