2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மாதம்பையில் பெண்ணின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.மும்தாஜ்)

மாதம்பை பொலிஸ் பிரிவிலுள்ள காட்டுப் பகுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தினை இன்று புதன்கிழமை காலை மாதம்பை பொலிஸார் மீட்டுள்ளனர். சுமார் 40 வயதிற்குட்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்துவிட்டு குறித்த பிரதேசத்தில் கொண்டு வந்து போட்டுள்ளனரா என்பது தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X