2025 மே 23, வெள்ளிக்கிழமை

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஜூட் சமந்த)


புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தளம, நூர்நகர் பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருள் அடங்கிய 300 சிறிய பெக்கட்டுக்களுடன் இளைஞர் ஒருவர் நேற்று புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இருபத்தி இரண்டு வயதுடையவர் எனவும் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு அறிக்கையினைப் பெற்றுக்கொள்ளும்வரை அவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும்,
அறிக்கை கிடைத்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X