2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் தற்கொலை

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ். எம். மும்தாஜ்)

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வைத்தியசாலை மலசலகூடத்திற்கு நேற்றிரவு சென்ற இப்பெண் அங்கு கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டு உயிரிழந்து கிடந்த நிலையில் வைத்தியசாலை ஊழியர்களினால் மீட்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இப்பெண் விபத்தொன்றில் சிக்கி காயங்களுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .