2025 மே 23, வெள்ளிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Super User   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

புத்தளம்  - அநுராதபுர வீதியின் 9ஆம் மைல் பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்;த விபத்தினால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான வர்ணகுலசூரிய கெலும் பெரேரா என்ற நபர் உயிரிழந்துள்ளார். 

கெழும்பிலிருந்து அநுரதாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் ஒன்றும் துவிச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த ஜீப் வண்டியை செலுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X