2025 மே 23, வெள்ளிக்கிழமை

எனது சகோதரரே முதலமைச்சர்: சந்திரசேன

Super User   / 2012 செப்டெம்பர் 21 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது சகோதரரான எஸ்.எம். ரஞ்சித், வடமத்திய மாகாண முதலமைச்சராக எதிர்வரும் 24 ஆம் திகதி நிச்சயமாக பதவியேற்பார் என முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் தனது இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்கவை மீண்டும் முதலமைச்சராக நியமிக்காவிடின் 130 உள்ளூராட்சி உறுப்பினர்கள் ராஜினாமா செய்வர் என பேர்ட்டி பிரேம்லால் திஸாநாயக்க தெரிவித்தமை உண்மையல்ல எனவும் எஸ்.எம்.சந்திரசேன கூறினார். 

முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான குழு விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே தான் ராஜினாமா செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

(ரொஷான் சந்திரதாஸ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X