2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மகளிர் அபிவிருத்தி உத்தியோஸ்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆகில் அஹமட்)

வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் சேவையாற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோஸ்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த, இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிறேட் லோச்சன் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர் மற்றும் மகளிர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வரும் நிலையில் மகளிர் அபிவிருத்தி உத்தியோஸ்தர்களின் சேவையினை அதிகரித்து துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படுவதாக அமைச்சர் திஸ்ஸ கரல்லியத்த தெரிவித்தார்.

இவ்வைபவத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் சுபினே நந்தி, ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதிய பிரதிநிதி கே.கிறிஸ்டியன்ஸன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X