2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

பதுளை இளைஞன் உடப்பில் சடலமாக மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 23 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (எம்.என்.எம்.ஹிஜாஸ்)
உடப்பில், இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு  இறால் பன்னையில் காணப்படும் இறால் வளர்ப்பு நீர் நிலையிலிருந்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பதுளையை சேர்ந்த நடராஜ் ரவிசந்திரன் எனும் 26 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன்  கடந்த 3 நாட்களுக்கு முன்னரே இவ் தனியார் இறால் பன்னையில் வேலைக்கு சேர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X