2025 மே 22, வியாழக்கிழமை

முதிரை மரப் பலகைகளைக் கடத்திய இருவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அனுமதிப் பத்திரமின்றி 59 முதிரை மரப் பலகைகளை வேன் ஒன்றில் ஏற்றிச்சென்ற இருவருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா அபராதமும் ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனையையும் விதித்து கெப்பித்கொல்லாவ நீதவான் நீதிமன்ற கயான் மீகஹகே உத்தரவிட்டார்.

விதிக்கப்பட்ட ஒரு வருட கால சிறைத் தண்டனையை பத்து வருடங்களுக்கும் நீதவான் ஒத்தி வைத்தார். ஹொரவப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் சில காலங்களாக சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட பலகைகளை அரச உடமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ மகாநாமவின் ஆலோசனைப்படி பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X