2025 மே 22, வியாழக்கிழமை

வடமத்திய மாகாண வீதிகளை வடக்குடன் இணைக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாண வீதிகளை வடக்குடன் இணைக்கும் அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 1590.07 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை வடமத்திய மாகாணத்திலுள்ள 504 கிலோ மீற்றர் கிராமிய வீதிகளைப் புனரமைப்பு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஜப்பானின் ஜாய்க்கா அமைப்பும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலுள்ள 220 கிலோ மீற்றர் வீதிகளைப் புனரமைப்புச் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி 4000 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்குள்ளாகி சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 170 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது.

சேதமடைந்த 107 கிலோ மீற்றர் வீதியினைப் புனரமைப்பதற்காக ஜாய்க்கா அமைப்பு முதற் கட்டமாக 1190 மில்லின் ரூபா நிதியினையும் இரண்டாம் கட்டமாக 300 மில்லின் ரூபா நிதியினையும் ஒதுக்கியுள்ளது.

வடமத்திய மாகாண சபை 2013ஆம் ஆண்டில் வீதிப் புனரமைப்பிற்காக 412 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X