2025 மே 22, வியாழக்கிழமை

சத்திரசிகிச்சை கூடத்தில் தீ

Kanagaraj   / 2012 டிசெம்பர் 15 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இன்று அதிகாலை வேளையிலேயே இந்த தீ பரவியதாகவும் சேதங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

தீயை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த போதிலும் சத்திரசிகிச்சை நடவடிக்கைளை உடனடியாக முன்னெடுப்பதற்கான வசதிகள் இப்போதைக்கு இல்லையென வைத்தியசாலையின் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X