2025 மே 22, வியாழக்கிழமை

விவசாயக் காணி வழங்கும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                         

வடமத்திய மாகாணத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுவதற்காக காணிகள் அற்ற  விவசாயிகளுக்கு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் காணிகளை வழங்கும் வேலைத்திட்டமொன்றை மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுத்தவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திட்டங்களுக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாக கைப்பற்றிச் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எல்லைக்கல் இடப்படாமையினால் சட்டவிரோதமாக இச்செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இச்செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்காக விசேட செயற்றிட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் நுவரவாவி மற்றும் திஸாவாவிகளை அண்டிய பகுதிகளிலுள்ள சட்டவிரோதக்காரர்களை அகற்றுவதற்காக அளவிடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லைக்கல் இடும் பணிகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X