2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அடைமழையால் அநுராதபுரம் குளங்கள் பெருக்கெடுப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 24 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம் நகரத்திலுள்ள சகல பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக்கப்பட்டுள்ளதாக  வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் அடை மழையின் காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருகின்றன. எனவே இருப்பிடங்களை விட்டு வெளியாகும் மக்களைத் தங்க வைக்கும் நோக்கில் சகல பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக அநுராதபுரம் மாவட்டத்தில் சுமார் 3000 குளங்கள் வானிடத் தொடங்கியுள்ளன.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள பெரிய மற்றும் நடுத்தரத்திலான 86 குளங்களில் 75 குளங்கள் வான் இட்டுள்ளதாகவும் அநுராதபுரம் மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் லலித் த அல்விஸ் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X