2025 மே 22, வியாழக்கிழமை

விதைநெல் மற்றும் உரவகைகளை வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம். சீ. சபூர்தீன்)                   
வெள்ளப் பெருக்கினால் முழுமையாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட 176,085 ஏக்கர் வயற் காணிகளுக்கு விதைநெல் மற்றும் உரவகைகளை இலசமாக வழங்க கமநல சேவைகள் மற்றும்  வனவிலங்குகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

வெள்ளப் பெருக்கினால் 10 மாவட்டங்களிலுள்ள சிறிய மற்றும் மத்திய தரத்திலான 85 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் 15 குளங்கள் உடைப்பெடுத்ததால் 15 ஆயிரம் ஏக்கர் வயற் காணிகளும், பொலன்னறுவை மாவட்டத்தில் 8 குளங்கள் உடைப்பெடுத்ததால் 20 ஆயிரம் ஏக்கர் வயற் காணிகளும், குருநாகல் மாவட்டத்தில் 2 குளங்கள் உடைப்பெடுத்ததால் 15 ஆயிரம் ஏக்கர் வயற் காணிகளும், அம்பாறை மாவட்டத்தில் 17 குளங்கள் உடைப்பெடுத்ததால் 18 ஆயிரம் ஏக்கர் வயற் காணிகளும் திருகோணமலை மாவட்டத்தில் 10 குளங்கள் உடைப்பெடுத்ததால் 17,250 ஏக்கர் வயற் காணிகளும், மட்டகளப்பு  மாவட்டத்தில் 4 குளங்கள் உடைப்பெடுத்ததால் 43 ஆயிரம் ஏக்கர் வயற் காணிகளும்  மன்னார் மாவட்டத்தில் 2 குளங்கள் உடைப்பெடுத்ததால் 8600 ஏக்கர் வயற் காணிகளும் மாத்தளை மாவட்டத்தில் 12 குளங்கள் உடைப்பெடுத்ததால் 12 ஆயிரம் ஏக்கர் காணிகளும் முழமையாக அல்லது பகுதியவில் சேதமடைந்துள்ளதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளப் பெருக்கு முற்றாக வடிந்த பின்னர் இத்தொகை மேலும் அதிகரிக்குமெனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X