2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளம் மாவட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 28 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதற்கமைய இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின்  கதவுகள் 6 திறந்து விடப்பட்டுள்ளதினால் ஆனமடுவ, நவகத்தேகம, வணாத்தவில்லு, கருவலகஸ்வௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு இங்கினிமிட்டி நீர்பாசனத் திணைக்கள பொறியியலாளர் சனத் குணசேன தெரிவித்துள்ளார்.

இங்கினிமிட்டிய நீர்த்தேக்க கதவுகள் திறந்துள்ளதினால் ஆனமடுவ – நவகத்தேகம வீதி நீரில் மூழ்கியுள்ளதுடன் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜயம்பதி குளத்தின் அணைக்கட்டுப் பகுதி உடைந்துள்ளதினால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து மண்மூட்டையினை அடுக்கி நீர் வெளியேறுவதினை தடுத்து வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X