2025 மே 22, வியாழக்கிழமை

தகுதியான நபர்களை தேடுவதில் சிக்கல்: கோட்டாபய

Kanagaraj   / 2012 டிசெம்பர் 30 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச துறையில் பல்வேறு வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகுதியான நபர்களை தேடிக்கொள்வதில் அரசாங்கம் சிக்கல்களை எதிர்கொள்கின்றது. என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருணாக்கல் டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரச துறையில்  இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் கூடுதலான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. இவ்வாறான வேலை வாய்ப்புகள் இருந்தும் முக்கியமான துறைகளில் இணைந்து கொள்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில்  வெற்றிடங்கள் நிலவுகின்றன. அந்த வெற்றிடங்களுக்கு தகுதியான நபர்களை தேடிக்கொள்வதில் அரசாங்கம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது. உள்நாட்டில்  பொறியாளர்கள் பற்றாக்குறை நிலவுகின்றன. மருத்துவ தொழில் இணைந்து கொள்வதற்கு இளைஞர் யுவதிகள்  தயக்கம் காட்டுகின்றனர் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • ama Sunday, 30 December 2012 02:42 PM

    தகுதியுள்ளவர்கலுக்கு நீங்கள் வேலை கொடுப்பது இல்லை. அதனால் தான் இந்த நிலைமை. வாழ்க தாயக‌ம்.

    Reply : 0       0

    Kanavaan Sunday, 30 December 2012 03:09 PM

    உங்கட சம்பளமும் குறைய அத்தோடு கட்டுப்பட்டு அடிவாங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்பட வாய்ப்பு, இந்தக் காலத்துப் பசங்க யாரும் இந்த உத்தியோகத்துக்கு வருவாங்களா என்ன? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ஐயா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X