2025 மே 22, வியாழக்கிழமை

வடமத்திய மாகாண பாடசாலை மாணவர்கள் ஒரேவகையான பாதணிகள் அணிய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                          

இவ்வருடத்திலிருந்து வடமத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் அலங்காரமற்ற ஒரேவகையான பாதணிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் சுற்றுநிரூபம் மூலம் அறிவிக்கப்படவுள்ளதாக  வடமத்திய மாகாண கல்வியமைச்சர் பேஷல ஜயரத்ன தெரிவித்தார்.

அநேகமான பாடசாலை மாணவர்கள் விலையுயர்ந்ததும் அலங்கார வடிவமுடையதுமான  பாதணிகளை போட்டுக்கொண்டு பாடசாலைக்கு வருவது பாடசாலையின் ஒழுங்கீனத்தை காட்டுவதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  இதனைத் தொடர்ந்தே அனைத்து மாணவர்களும்  ஒரேவகையான பாதணிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மாணவர்கள் கறுப்புநிற பாதணிகளையும் மாணவிகள்   வெள்ளைநிற பாதணிகளையும் அணிய வேண்டுமென அறிவித்தல் விடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X