2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கைத்தொழில் துறையில் பயிற்சிகளை வழங்கும் விசேட திட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 08 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்

'லியசவிய' வேலைத் திட்டத்தின் கீழ் வடமத்திய மாகாணத்தில் பாடசாலையை விட்டு விலகிய இளைஞர் யுவதிகளுக்கு கைத்தொழில் துறையில் பயிற்சிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோனின் ஆலோசனைப்படி கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள மகளிர் தொழிற் பயிற்சி நிலையங்கள் 5 ஐ புனரமைத்து தையற் பயிற்சி நிலையங்களாக நடாத்திச் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 12 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X