2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரத்தில் மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் மீண்டும் டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அநுராதபுரம் மாநகர சபையின் சுகாதார பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் 44 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.  இவர்களில் 20 பேர் கடந்த டிசம்பர் மாதத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வெள்ளப் பெருக்கினால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு வீடு மற்றும் சுற்றுப் புறச் சூழலை டெங்கு பரவலில் இருந்து தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாநகர சபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X