2025 மே 22, வியாழக்கிழமை

அநாதரவான நிலையில் தந்தையை தேடி சென்ற சிறார்கள் பொலிஸாரினால் மீட்பு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க


அநாதரவான நிலையில் தந்தையை தேடி புத்தளம் பாலவிய பகுதிக்கு வந்த இரு சிறுவர்களை புத்தளம் பொலிஸார் பாதுகாப்பாக மீட்ட சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

12 வயது சிறுமியும் மற்றும் 4 வயது சிறுவனுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புத்தளம், நவத்தேகம பகுதியைச் சேர்ந்த மேற்படி சிறுவர்கள் தமது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

மேற்படி சிறுவர்களின் தந்தை, இச்சிறுவர்களையும் மற்றும் தாயையும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததன் காரணமாக இச்சிறுவர்களின் தாய் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இச்சிறுவர்களை உறவினர் ஒருவரின்  வீட்டில் விட்டு விட்டு தந்தை தொழிலுக்காக கற்பிட்டிக்கு சென்றுள்ளார்.

உறவினர் ஒருவரின்  வீட்டில் நீண்டகாலமாக தங்கியிருந்த இச்சிறுவர்களை,  உறவினர்  தனது வீட்டிலிருந்து வெளியேற்றிய நிலையில் மேற்படி சிறுவர்கள் தமது தந்தையை தேடி புத்தளம் பாலவிய பகுதிக்கு வந்துள்ளனர்.

இதன்போது கடையொன்றில் தண்ணீர்போத்தலை எடுக்க முற்பட்ட போது அக்கடையின் உரிமையாளரான பெண்ணொருவர் இச்சிறுவர்களை அழைத்து உணவு கொடுத்துள்ளதுடன் இச்சிறுவர்கள் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், புத்தளம் பொலிஸார் இச்சிறுவர்களை மீட்டு தமது பாதுகாப்பில் வைத்துள்ளதுடன் இச்சிறுவர்கள் தொடர்பிலான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X