2025 ஜூலை 10, வியாழக்கிழமை

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டம்

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு - தலாகேன, பமுனுகம பேருவ பிரதேசங்களில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்;பான வேலைத்திட்டம் ஒன்று நேற்று மாலை துங்கல்பிட்டிய டொன்பொஸ்கோ நிலையத்தில் இடம்பெற்றது.

துங்கல்பிட்டிய டொன்பொஸ்கோ நிலையத்தின் பிரதான பொறுப்பாளர் அருட்தந்தை நிகால் லியனகே தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட் தந்தையர்களான பெட்ரிக், ஆனந்தவிதாரன, குரோட் வனசிங்க, மிலிந்த விக்ரமசிங்க, ஐவன் பீட்டர்ஸ் மற்றும் நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கலப்பதி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த அல்விஸ், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ், மது ஒழிப்பு அதிகாரிகள், சட்டத்தரணிகள், பிரதேச இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அருட்சகோதரிகள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.

இந்நிகழ்வில் சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள்பாவனை ஆகியவற்றை ஒழிப்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் பல்வேறு தரப்பினரதும் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பில் கருத்துக்கள் பறிமாறப்பட்டதுடன் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முடிவுகள் சில எடுக்கப்பட்டன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .