2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அநுராதபுரம் நகரத்திற்குள் நுழையும் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின

Kogilavani   / 2013 ஜனவரி 11 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                     

ரஜரட்ட பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அநுராதபுரம் நகரத்திற்குள் நுழையும் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

மல்வத்து ஓயா பெருக்கெடுத்தமையினால் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலுள்ள சகல வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. 

ஜயந்தி மாவத்தை நீரில் மூழ்கியுள்ளதால் அநுராதபுரம் வலயக் கல்விக் காரியாலயம், ஹரிச்சந்திர மைதானம் உட்பட பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு புகையிரத வீடுகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.

இதேவேளை குட்டம்பொக்குன வீதி, மிஹிந்துபுர அம்பகஸ் வீதி ஆகிய வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .