2025 மே 22, வியாழக்கிழமை

மல்வத்து லேன் பகுதியிலுள்ள மக்களை நீராவி பகுதியில் குடியமர்த்த நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 13 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்
   
                    
அநுராதபுரம் மல்வத்து லேன் பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களை நீராவி பகுதியில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மல்வத்து லேன் பகுதியிலுள்ள பள்ளிவாசலை அகற்றுமாறும் அங்குள்ள முஸ்லிம் குடும்பங்களை வெளியேறுமாறும் கோரி கடந்த சனிக்கிழமை அநுராதபுரம் நகரத்தில் பௌத்த பிக்குகளினால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து  வடமத்திய மாகாண முதலமைச்சர் அநுராதபுரம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையுடன் பேச்சுவார்த்தையொன்றை நடாத்தியிருந்தார்.

முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதாக இருந்தால் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளிலேயே அவர்களை குடியமர்த்த வேண்டுமென இதன்போது முஸ்லிம் தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

முஸ்லிம் மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் விரும்பிய நீராவி பிரதேசத்தில் குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஏற்கனவே மல்வத்து ஓயா பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்காக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் ஒதுக்கப்பட்டிருந்த ஐந்து இலட்சம் ரூபா நிதியை நீராவி பள்ளிவாசலுக்கு வழங்கப்படுமெனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X