2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 18 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இரண்டு கிலோகிராம் மான் இறைச்சியை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை இராஜாங்கனை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து ஹொருவில கட்டப்பொத்தேவ பகுதியிலுள்ள வீடொன்றைச் சோதனையிட்டபோது, குளிர்சாதனப்பெட்டியிலிருந்து மான் இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்கனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டார விஜேகோனின் ஆலோசனைக்கமைய இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X