2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர் கைது

Super User   / 2013 ஜனவரி 28 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பல்வேறுபட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். புபுதுபுர பகுதியை சேர்ந்த 37 வயதுடைய தச்சு தொழிலிலாளி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வீடுகளுக்குள் புகுந்து வீட்டிக் கதவை சூட்சமமான முறையில் உடைப்பதில் பிரசித்தம் பெற்றவர் எனவும் கதவின் பூட்டுக்களை உடைப்பதற்காகப் பயன்படுத்திய உபகரணங்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ விதானவின் ஆலோசனைப்படி குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எஸ்.குமாரசேனவின் வழிகாட்டலில் சந்தேக நபர் கைசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X