2025 மே 22, வியாழக்கிழமை

வடமத்திய மாகாணசபையின் நிர்வாகப் பிரிவிலுள்ள பாடசாலைகளை மேம்படுத்த நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண சபையின் நிர்வாகப் பிரிவிலுள்ள சகல பாடசாலைகளினதும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்த முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்காக 300 மில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாடசாலைகளில் நிலவும் சகல குறைபாடுகளையும் நீக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மின் இணைப்பு அற்ற பாடசாலைகளுக்கு இணைப்புக்களை வழங்குவதற்கும் கணினி மத்திய நிலையங்கள் அற்ற பாடசாலைகளுக்கு  மத்திய நிலையங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.

இவ்வேலைத்திட்டங்கள் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலுள்ள எட்டு கல்வி வலயங்கள் ஊடாக செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X