2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

நன்னீர் மீன்களை உயர் தரத்தில் பொதி செய்து சந்தைப்படுத்தும் திட்டம்

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

நன்னீர் மீன்களை உயர் தரத்தில் பொதி செய்து சந்தைப்படுத்தும் திட்டமொன்று அநுராதபுரம் மஹவிலச்சிய பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மஹவிலச்சிய குளத்தில் பிடிக்கப்படும் மீன்களே இவ்வாறு பொதி செய்து சந்தைப்படுத்தும் திட்டம் மஹவிலச்சிய பகுதி மீனவர் சங்கங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படவுள்ளன.

பிடிக்கப்படும் மீன்களை முள் நீக்கி பதனிடுவதற்காக 15 இலட்சம் ரூபா செலவில் கட்டிடத் தொகுதியொன்றும் அமைக்கபட்டுள்ளது. மேலும் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு மீன் குஞ்சுகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X