2025 மே 22, வியாழக்கிழமை

மோதலை தடுக்கச் சென்ற பொலிஸாருக்கு பொல்லால் தாக்குதல்: ஒருவர் காயம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் நொச்சியாகம பகுதியில் மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டுள்ளதோடு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமுற்றுள்ள சம்பவமொன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நொச்சியாகம பகுதியில் மோதல் ஒன்று இடம்பெறுவதாக அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதோடு கலகத்தைத் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது. அதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக நொச்சியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X