2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

மத்திய நிலையங்களூடாக நெல் கொள்வனவு செய்ய ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                 

அநுராதபுரம் மாவட்டத்தில் 27 மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல் கொள்வனவு சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் பந்துலகுமார தெரிவித்தார்.

இதன்படி தலாவ, தமுத்தேகம, விஜித்தபுர, கெக்கிராவ, மதவாச்சி, நொச்சியாகம, பதவிய, இராஜாங்கனை, யகள்ள, கலெண்பிந்துனுவெவ, நேகம, கல்கிரியாகம, சிராவஸ்திபுர, ரம்பாவ, வாஹல்கட, கெப்பித்திகொள்ளாவ, ஹுரிகஸ்வெவ, கல்நேவ, கட்டியாவ, சேனபுர, எந்தகல, விலச்சிய, பஹல ஹல்மில்லாவ, நாச்சியாதீவு, கஹட்டகஸ்திகிலிய, ஹொரவப்பொத்தானை, அநுராதபுரம் ஆகிய மத்திய நிலையங்கள் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்த நிலையங்கள் அனைத்தும் நெல் கொள்வனவுக்காக  தற்பொழுது திறந்து வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X