2025 ஜூலை 09, புதன்கிழமை

பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்த விற்பனை நிலையங்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

புத்தாண்டு காலத்தில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 30 விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம் பிரதேச சுகாதார சேவை அலுவலக அதிகாரிகள் அநுராதபுரம் நகரம், கெக்கிராவ, ரம்பாவ, மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட சோதனையின்போதே பாவனைக்குதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்த விற்பனை நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது 10 கிலோ கிராம் கொண்ட 18 அரிசி மூட்டைகள், 140 லீற்றர் தேங்காய் எண்ணெய், ஒரு தொகை கடலை உள்ளிட்ட உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .