2025 மே 21, புதன்கிழமை

நீர் நிரம்பிய குழியினூள் வீழ்ந்து சிறுமி மரணம்

Super User   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

நாத்தாண்டிய, கொட்டராமுல்லை பிரதேசத்தில் நான்கு வயது சிறுமி நீர் நிரம்பிய குழியினூள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதுவருட தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தை தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் காணப்பட்ட நீர் நிரம்பிய குழியினூள் வீழ்ந்துள்ளது. அக்குழியானது வாகனம் சேர்விஸ் பன்னுமிடத்திலிருந்து நீர் வந்து சேரும் குழியென தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் பிரேர பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. மாராவில பொலிசார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X