2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கொழும்பு - புத்தளம் ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

Super User   / 2013 ஏப்ரல் 24 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர். ரஸ்மின்

கொழும்பு - புத்தளம் ரயில் சேவை இரண்டு தினங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பிரதான புகையிரத நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால் நாளை வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்

சீதுவ முதல் கட்டுநாயக்க வரையிலான புகையிரத பாதையின் அவசர திருத்த வேலை காரணமாகவே ரயில் சேவைகள் இரண்டு தினங்களுக்கு பாதிப்படைவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X