2025 மே 21, புதன்கிழமை

முன்னாள் இராணுவ வீரரின் வீட்டுக்கு தீ வைப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

மிஹிந்தலையிலுள்ள முன்னாள் இரானுவ வீரர் ஒருவரின் வீட்டுக்கு இனந்தெரியாதோரினால் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

மிஹிந்தலை கனந்தராவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம்  தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவரின் வீட்டுக்கே புதன்கிழமை தீ மூட்டப்பட்டுள்ளது.

கொழுத்தப்பட்டுள்ள வீட்டின் கூரைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு வீட்டிலுள்ள சகல மின்னியந்திரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X